செவ்வாய், 27 அக்டோபர், 2009

தென்னாப்ரிக்க குலினான் சுரங்கத்தில் மிகவும் பெரிய வைரம் கண்டுபிடிப்பoo
அக்டோபர் 27,2009,

பிரிட்டோரியா : தென்னாப்ரிக்காவில் அமைந்துள்ள குலினான் சுரங்கத்தில் இருந்து உயர் தரமான வைரம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரா டயமண்ட் என்ற சுரங்கக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
தென்னாப்ரிக்காவின் கவுடெங் மாகாணத்தின் பிரிட்டோரியா நகரத்தில் இருந்து 25 மைல் தொலைவில் அமைந்தள்ள குலினான் சுரங்கத்தில், கடந்த வாரம், பெரிய உயர் தரமான பட்டை தீட்டப்படாத வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம் 507 காரட் நிறை கொண்டது. கிட்டத்தட்ட 100 கிராம் எடை கொண்டது.இந்த வைரம் தனிச்சிறப்பான நிறம் மற்றும் தன்மை வாய்ந்தது என்பது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, முதல் தர வகையைச் சேர்ந்த வைரமாக இருக்கலாம். இந்த வைரத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது, உலகளவில் கண்டெடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத உயர் தர மிக்க 20 வைரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வைரத்தை நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே, அது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிய வரும்.இதனுடன் 168 காரட், 58.50 காரட் மற்றும் 53.30 காரட் மதிப்பு வாய்ந்த மேலும் மூன்று வைரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
குலினான் சுரங்கத்தில் ஏற்கனவே மே மாதத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரம், ஹாங்காங்கில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.கடந்த 1905ம் ஆண்டு தான், ஒரிஜினல் குலினான் வைரம் கண்டெடுக்கப்பட்டது. அது, 3,106 காரட் மதிப்பு வாய்ந்தது. இந்த பட்டை தீட்டப்படாத வைரம், கடந்த 1905ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி, பிரடெரிக் வெல்ஸ் என்பவர் சுரங்கத்தில் தோண்டும் போது கிடைத்தது. பின், இந்த வைரத்தை ஒன்பது சிறிய வைரங்களாக வெட்டி, மன்னர் ஏழாம் எட்வர்டிடம் வழங்கப்பட்டது.கடந்த மே மாதம் குலினான் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை நீல வைரம், ஹாங்காங்கில் 31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
உலகின் அழகிய நகரம்
"லைப் ஸ்டைல்' பத்திரிகை, உலகின் அழகு நகரங்களில் முதல் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் டென்மார்க்கின் தலைநகர் கோபன் ஹேகன் இடம் பெற்றுள்ளது. நாம் அனைவரும் மிகவும் அழகிய நகரமாகக் கருதும் பாரிஸ் நகரமே இப்பட்டியலில் பத்தாவதாக தான் இடம் பெற்றுள்ளது. இந்திய நகரங்களில் ஒன்று கூட இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை. மிகப்பெரிய நகரமான கோபன் ஹேகன், சீலாந்து மற்றும் அமேஜர் தீவுகளில் அமைந்துள்ளது. டேனிஷ் மன்னர்களின் தலைமையகமாக இது இருந்தது. ஐரோப்பாவில் உள்ள பண்பாட்டு மற்றும் கல்வி மையங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. வரலாற்று ரீதியில் கோபன்ஹேகன் வணிக மற்றும் கப்பல் போக்குவரத்து மையமாக உள்ளது. ஐரோப்பா வின் பண்பாட்டு மற்றும் கல்வி மைய நகரமாக விளங்கும் கோபன் ஹேகன் அரண்மனை மற்றும் டிவோலி பொழுதுபோக்குப் பூங்கா ஆகியன கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

புதன், 30 செப்டம்பர், 2009

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

2007-08 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
செவ்வாய், 29 செப்டம்பர் 2009
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிவா‌ஜி படத்தில் நடித்ததற்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு ர‌ஜினியும், தசாவதாரம் படத்துக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு கமலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உளியின் ஓசை படத்துக்காக சிறந்த வசனர்த்தாவாக முதல்வர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற விருது விவரங்கள் வருமாறு.2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :சிறந்த படம் முதல் ப‌ரிசு - சிவா‌ஜி சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - மொழிசிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - பள்ளிக்கூடம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - பெ‌ரியார்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் சிறப்புப் ப‌ரிசு - மிருகம்அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம் - தூவானம்சிறந்த நடிகர் - ர‌ஜினிகாந்த்சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சத்யரா‌ஜ் (பெ‌ரியார்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - பத்மப்‌ரியா (மிருகம்)சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவா‌ஜி)சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த இயக்குனர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதாசி‌ரியர் - எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - பாலா‌ஜி சக்திவேல் (கல்லூரி)சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)சிறந்த பாடலாசி‌ரியர் - வைரமுத்து (பெ‌ரியார் மற்றும் பல படங்கள்)சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவா‌ஜி)சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)சிறந்த எடிட்டர் - சதீஷ்குரோசோவா (சத்தம் போடாதே)சிறந்த கலை இயக்குனர் - தோட்டாதரணி (சிவா‌ஜி)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)சிறந்த நடன ஆசி‌ரியர் - பிருந்தா (தீபாவளி)சிறந்த ஒப்பனை கலைஞர் - ராஜேந்திரன் (பெ‌‌ரியார்)சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன் (பில்லா)சிறந்த பின்னணி குரல் - ஆண் - கே.பி.சேகர் (மல‌ரினும் மெல்லிய)சிறந்த பின்னணி குரல் - பெண் - மகாலட்சுமி (மிருகம்)2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் : சிறந்த படம் முதல் ப‌ரிசு - தசாவதாரம் சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - அபியும் நானும்சிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - மெய்ப்பொருள்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் - பூ அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், முதல் ப‌ரிசு - வல்லமை தாராயோஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், இரண்டாம் ப‌ரிசு - வண்ணத்துப்பூச்சிசிறந்த நடிகர் - கமல்ஹாசன்சிறந்த நடிகை - சினேகா (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - த்‌ரிஷா (அபியும் நானும்)சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ்ரா‌ஜ் (பல படங்கள்)சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)சிறந்த இயக்குனர் - ராதாமோகன் (அபியும் நானும்)சிறந்த கதாசி‌ரியர் - தமிழ்ச்செல்வன் (பூ)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)சிறந்த பாடலாசி‌ரியர் - வாலி (தசாவதாரம்)சிறந்த பின்னணி பாடகர் - பெ‌ள்ளிரா‌ஜ் (சுப்பிரமணியபுரம்)சிறந்த பின்னணி பாடகி - மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)சிறந்த எடிட்டர் - ப்ரவீன் - ஸ்ரீகாந்த் (சரோஜா)சிறந்த கலை இயக்குனர் - ரா‌‌ஜீவன் (வாரணம் ஆயிரம்)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)சிறந்த நடன ஆசி‌ரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)சிறந்த ஒப்பனை கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)சிறந்த பின்னணி குரல் - ஆண் - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)சிறந்த பின்னணி குரல் - பெண் - சவீதா (பல படங்கள்)

புதன், 16 செப்டம்பர், 2009

சுறா... மீனவர் விஜய்

தனது 50-வது படத்தில் மீனவர் வேடம் போடுகிறார்விஜய் இந்தப் படத்துக்கு சுறா என்று பெயர் வைக்க யோசித்து வருகிறாராம்.
ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். ஆனால் கதைப்படி, நாயகன் பெயரான சுறா என்பதையே இந்தப் படத்துக்கு சூட்ட முடிவு செய்துள்ளார்களாம். விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். வரும் 18-ம் தேதி முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் விஜய் . ஏப்ரல் 14 அன்று சித்திரை ஸ்பெஷலாக வருகிறது சுறா. விஜய்யின் அடுத்த படமான வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகிறது.